கண்ணாடியில் உன்னை ரசித்துக்கொண்டிருகிறாய்,
கண்ணாடி உன்னை ரசித்துக்கொண்டிருக்கிறது.
உன் வரவுக்காக
பூக்களைத் தூவுகின்றன மரங்கள்,
நீயோ பூக்கள் மிதிபடாமல் முயல்குட்டி போல்
தாவித்தாவி செல்கிறாய்...
மைத்தூவும் என் பேனா
உன் பெயரை எழுதும் பொது மட்டும்,
காதலைத் தூவுகிறது.
என் அறை முழுதும் நிரம்பிக் கிடக்கின்றன,
காற்றும் அதற்கு மேலான உன் காதலும்.
பசி தாகம் சகிக்கலாம்,
உன் பேசா மௌனம் மட்டும் வேண்டாம்.
Thursday, July 14, 2011
Sunday, October 24, 2010
கவிதை சொல்லும் நேரம்
வேண்டாதவர்களைப் போல் பாசாங்கு செய்தாலும்
மீண்டும் மீண்டும் சந்திக்க விளைகின்றன இதழ்கள்
எவ்வளவு வேண்டுமானாலும் மாத முதல் தேதியிலே
கேட்டுவிடு என்கிறாய்,.........
மொத்தத் தேவைக்கு முதல் தேதி சரி,என்
முத்தத் தேவைக்கு என்ன வழி?
மீண்டும் மீண்டும் சந்திக்க விளைகின்றன இதழ்கள்
எவ்வளவு வேண்டுமானாலும் மாத முதல் தேதியிலே
கேட்டுவிடு என்கிறாய்,.........
மொத்தத் தேவைக்கு முதல் தேதி சரி,என்
முத்தத் தேவைக்கு என்ன வழி?
Thursday, September 16, 2010
Tuesday, August 31, 2010
தமிழ் - ஆங்கிலம் அகராதி இணைய இணைப்பு
தமிழிருந்து ஆங்கிலம் மற்றும் ஆங்கிலத்திலிருந்து தமிழ் சொற்கள் கற்றுக் கொள்ள இந்த இணைய இணைப்பை சொடுக்குக...
Monday, August 30, 2010
டைரி கிறுக்கல்கள் for my nuts:)
கனவின் நிஜம்
"காண்பதெல்லாம் கனவென்றால்
நடப்பதெல்லாம் நிஜமென்று என்ன நிச்சயம்?"
"காற்றுப் புகாத ஓட்டினுள் உயிர் புகுந்த மர்மம்
எனக்குள் நீ புகுந்தது என்னை அறியாமலேயே"
"மனதைப் பூட்டிவைத்துக் கொள்கிறாய்
உன் மௌனம் எனும்
சாவி திறந்து கட்டியது
உன்னுளிருக்கும் என்னை"
"எனக்குப் பிடித்த கவிதை நீ
உன்னைப் படித்த ரசிகன் நான்
எனக்குப் பிடித்த ஓவியம் நீ
உன்னை ரசிக்கும் கலைஞன் நான்"
என் காதலே
"புரிந்தது உன் கள்ளத்தனம் அதைக் கண்டவுடன்
உன் நாட்குறிப்பேடு முழுதும் வெற்றிடம்
என் பிறந்த நாள் குறிப்பு நீங்கலாக!!!"
"உன் ஏவுகணைப் பார்வைகளிலேயே என்
இதயம் சுக்குநூறாகிப் போகிறது , இதுபோதாமல்
அருகில்வேறு நெருங்கி அமர்ந்து இன்னும்
என்னைக் கூடுதலாக இம்சித்து கொல்லவேண்டுமா?"
"தயவு செய்து சத்தமாக பேசாதே!
அங்கே பார் சமயம் பார்த்து காத்திருந்த காற்று
உன் பேச்சுக்களை எந்தன் காதலை
களவாடிக் கொண்டு ஓடிகொண்டிருகின்றன"
மயிலிறகே
"ஆசை ஆசையாய்
மயிலிறகு வேண்டுமென்று கேட்டாய்
எனக்கு அழுகை அழுகையாய் வருகிறது
மயிலே என்னிடம் மயிலிறகு கேட்கிறதென்று"
"புத்தகப் பைத்தியம்தான் நான்
நீ புன்னகைத்துவிட்டுப் போனபின்
புத்தகங்களை பைத்தியமாக்கிக் கொண்டிருக்கிறேன்"
"பொதுவாக கவிதைகள் எழுதுவதில் எனக்கு....
(உடல் முழுவதும் ஒவ்வொரு செல்லிலும் ஊடுருவிக்
குடியேறிய உன் காதலை வெற்றுக்
காகிதத்தில் மைத்துளிகளாக விரவுவதில்)
......உடன்பாடில்லை!!!"
"என் எண்ணங்கள் யாவும்
எழுத்துக்களாகவே கரைந்துவிடுகின்றன
உன் முன்னே பேசும் போது,
சொற்கள் குறைப்பட்டுப்போகின்றன."
"காண்பதெல்லாம் கனவென்றால்
நடப்பதெல்லாம் நிஜமென்று என்ன நிச்சயம்?"
"காற்றுப் புகாத ஓட்டினுள் உயிர் புகுந்த மர்மம்
எனக்குள் நீ புகுந்தது என்னை அறியாமலேயே"
"மனதைப் பூட்டிவைத்துக் கொள்கிறாய்
உன் மௌனம் எனும்
சாவி திறந்து கட்டியது
உன்னுளிருக்கும் என்னை"
"எனக்குப் பிடித்த கவிதை நீ
உன்னைப் படித்த ரசிகன் நான்
எனக்குப் பிடித்த ஓவியம் நீ
உன்னை ரசிக்கும் கலைஞன் நான்"
என் காதலே
"புரிந்தது உன் கள்ளத்தனம் அதைக் கண்டவுடன்
உன் நாட்குறிப்பேடு முழுதும் வெற்றிடம்
என் பிறந்த நாள் குறிப்பு நீங்கலாக!!!"
"உன் ஏவுகணைப் பார்வைகளிலேயே என்
இதயம் சுக்குநூறாகிப் போகிறது , இதுபோதாமல்
அருகில்வேறு நெருங்கி அமர்ந்து இன்னும்
என்னைக் கூடுதலாக இம்சித்து கொல்லவேண்டுமா?"
"தயவு செய்து சத்தமாக பேசாதே!
அங்கே பார் சமயம் பார்த்து காத்திருந்த காற்று
உன் பேச்சுக்களை எந்தன் காதலை
களவாடிக் கொண்டு ஓடிகொண்டிருகின்றன"
மயிலிறகே
"ஆசை ஆசையாய்
மயிலிறகு வேண்டுமென்று கேட்டாய்
எனக்கு அழுகை அழுகையாய் வருகிறது
மயிலே என்னிடம் மயிலிறகு கேட்கிறதென்று"
"புத்தகப் பைத்தியம்தான் நான்
நீ புன்னகைத்துவிட்டுப் போனபின்
புத்தகங்களை பைத்தியமாக்கிக் கொண்டிருக்கிறேன்"
"பொதுவாக கவிதைகள் எழுதுவதில் எனக்கு....
(உடல் முழுவதும் ஒவ்வொரு செல்லிலும் ஊடுருவிக்
குடியேறிய உன் காதலை வெற்றுக்
காகிதத்தில் மைத்துளிகளாக விரவுவதில்)
......உடன்பாடில்லை!!!"
"என் எண்ணங்கள் யாவும்
எழுத்துக்களாகவே கரைந்துவிடுகின்றன
உன் முன்னே பேசும் போது,
சொற்கள் குறைப்பட்டுப்போகின்றன."
நிஜமான ஒரு கனவு !!!
நான் நடை பயின்ற உன்னதமான இரு தருணங்கள்......
பத்து மாதங்களில் தந்தையுடன்,
இருபத்திரண்டு வயதில் உன்னுடன்!!!
Subscribe to:
Posts (Atom)

