Wednesday, May 2, 2012

எ வெரி லிட்டில் ஸிமால் ஸ்டோரி ஹாப்பெண்ட் டுடே




வழக்கமா கிளம்புற நேரத்த விட்டு இன்னிக்கு தாமதமா வேலைக்குக் கிளம்பினேன். வர்ற வழில தினமும் ஒரு பிச்சைக்காரரப் பார்ப்பேன். இன்னிக்கு அவரப் பாக்கல. நான் என்னைக்குமே அவருக்குப் பிச்சை போட்டதில்ல. பிச்சை யாருக்கும் போடுவதிலும் எனக்கு விருப்பமிருந்ததில்ல. 

எப்பயும் சாப்டுற ஹோட்டல்ல நுழைஞ்சேன். ரெண்டு இட்லி, ஒரு தயிர் வடை ஆர்டர் பண்ணினேன். எனக்கு எதுத்த டேபிள்ல ஒருத்தர் திரும்பி உக்கார்ந்து சாப்டுட்டு இருந்தார். எங்கயோ பார்த்த முகம். அவரு வேற யாரும் இல்ல. நான் தினமும் பார்க்கும் அதே பிச்சக்காரர்தான். அவரு கலெக்ஷன் முடிச்சிட்டு டிஃபன் சாப்டுட்டு இருந்தார். மதிய சாப்பாடுக்கு பார்சல் வாங்கிக்கிட்டார். இதுக்கு மேல அவருக்கு இன்னிக்கு முழுதும் வேற என்ன வேலை இருக்கப் போகுது. சாப்டுட்டு தூங்குறதத் தவிற. . .

அப்பதான் நினைச்சேன். ச்சே அவரு என்ன விட புத்திசாலி. நானும் அவரும் ஒரே ஹோட்டல்ல தான் சாப்டுறோம். அவரு தினமும் ரெண்டே மணி நேரம்தான் செலவு பண்றார். இதே சாப்பாட்டுக்கு நான் 12மணி நேரம், சில நேரம் அதுக்கும் மேல. . . . நாய்ப்பொழப்பு. இப்பிடி சுலபமா வாழ்க்கை ஓட்டத்தெரியாத எனக்கு, அந்த பிச்சக்காரர் என்ன விட மேதாவியா தெரிஞ்சாரு.

7 comments:

  1. அடங்கொன்னியா.. இந்தப்பொழப்புக்கு பிச்ச எடுக்கலாம்'ங்குற கவுண்ட்ஸ் டயலாக்தான் ஞாபகம் வருது ;-)))

    ReplyDelete
    Replies
    1. அதே. . . :( ஐ ஸ்டண்ட் டூ சீன் தட்.

      Delete
  2. தம்பி! ரொம்ப யோசிச்சீன்னா, இமயமலைக்கு போயிருவ!

    மூளைய தட்டிக் குடுத்து தூங்க வையி! அப்பப்போ, போயி எம்ஜி ரோட்டுல இடி வாங்கிட்டு வா!

    வாழ்க்கையில நெறைய அடிபட வேண்டி இருக்கு!

    இந்த ஆராய்ச்சியெல்லாம் அம்பது வருசத்துக்கு அப்புறம் வச்சுக்குவோம்.

    அதுவரைக்கும், இந்த உலகத்தை “வளர்க்க” நம்மால் இயன்ற ஒன்றே ஒன்றை தப்பாமல் செய்வோமாக!

    ஆமென்!

    ReplyDelete
    Replies
    1. "உலகத்த வளர்க்க" . . . :-) அவ்வாறே அண்ணலே. கல்யாண வேலையா சீக்கிரம் வூட்ல ஆரம்பிக்க சொல்லணும்.

      Delete
  3. அவர் இரண்டு மணி நேரம் சம்பாதிச்சா சாப்பிட மட்டும் செய்யுறாரு. ஆனா, நீங்க 12மணி நேரம் உழைக்கிறதால தான் ஒரு வீட்டில் இருந்து மின்சாரத்தைச் செலவு பண்ணி இப்படி பலரும் படிக்கும் படி கதை எழுத முடியுது!!

    ReplyDelete
    Replies
    1. நான் வொர்த்ன்னு சொல்றீங்களா? இல்லையா பாஸ்? :)))

      Delete
  4. ஹா ஹா.. சூப்பர் பாஸ்!

    ஒரு வேளை நீங்க தினமும் பிச்சை போட்டிருந்தா?? அந்த டிஃபன்ல என் ஷேர் இருக்குன்னு எழுதியிருப்பீங்க இல்ல?

    ReplyDelete