Saturday, October 1, 2011

ஞாபகங்கள்

‎" ஊர்க்காடு மேஞ்சு ஆடித்திரிஞ்சு
வீடு வந்து சேருவேன் பொத்தான் போடத் தெரியாத வயசுல.
கல்யாண வீட்டுல சந்தனமும் பன்னீரும் கொழச்சு புசினாப்புல
புழுதியும் தூசியும் அப்பியிருக்கும் என் மேனி பூரா;

ஆத்தா என்னைத்தேடி அலக்கழிஞ்சு போயி
என்ன விளாச இருக்கங்குச்சி எடுத்து வச்சுருப்பா;
பொழுது சாஞ்சா வீடு விட்டு அடைய வேறு கூடு உண்டா?
ஆத்தா அடிக்க வர, அம்மாயி புறத்தாலதான் ஒளிஞ்சுப்பேன்;
சாக்கு போக்கு சொல்லி ஆத்தாள அனுப்பி விட்டு
விழுந்த ஒன்னிரண்டு அடிக்கும் சமரசம் செய்வா அவ;

மூஞ்சி முகர தேச்சுக் கழுவி முகம் தொடச்சு,
உடுப்பு மாத்தி பகுடர் பூசி பக்குவம் செய்வா;
பருப்புக்கீரைப் போட்டு கத்திரிக்கா பொறிச்சு ஊட்டிவிடுவா;
அந்த சூனியக்காரிய விட்டா வேற யாரு குடுத்தாலும்
இறங்காது சோறு எனக்கு....

எதோ ஒரு மயக்கம், எங்கிருந்தோ வரும் அந்த கிறக்கம்,
என் ஆத்தாளப் பெத்தவ மடியில நான் கெடக்கயில;
தலையக் கோதி தாலாட்டு பாடுவா
கத நூறு சொல்லி கண்ணுறங்கவைப்பா;
என்ன மாயம் செய்வாளோ , என்ன மந்திரம் சொல்வாளோ,
எங்கிருந்தோ திறேகத்துல புகிந்திடும் உறக்கம்;

பாதகத்தி என்ன பரிதவிக்க விட்டு போனா பாதியில
திக்குதெச தெரியல, எனக்கு ஊழியம் பக்க யாரும்மில்ல;

பட்டணம் சேந்து பல வருசமாச்சு;
சொகுசா கார வீடு கட்டி காரு வாங்கியாச்சு;
பவுசா பஞ்சு மெத்த வங்கி ஏசி போட்டாச்சு;

வரமாட்டேங்குதே இந்த வசதியிலும்
அவ மடியில வந்த அந்த உறக்கம்;
என்ன செய்ய பாழப்போன இந்த பட்டணத்துல
போக்கத்து போயி தூக்கம் தொலைச்சேன் நான்...."

........ராஜா சங்கர் ஜீவா 

மழை




"மழை பெய்கிறது
பேருந்துகள் திடீர் வெள்ளத்தில்
நீந்திச் செல்கின்றன;

மூச்சு விடாமல் மோட்டார் வாகனங்கள்
முறுக்கி விடப்படுகின்றன,
தண்ணீர் குடித்து விடக்கூடாதென;

நீந்தத் தெரியாமல் தண்ணீர் குடித்து
பாதி வழியில் பரிதாபமாய்
நிற்கும் ஆட்டோக்கள்;

நனைந்தது பாதி, நனையாதது பாதியென
அங்கும் இங்கும் சாலையோரங்களில்
தஞ்சம் புகும் மக்கள்;

புத்தகப் பொதிகள் நனைந்து விடக் கூடாதென
நெகிழிகளால் சுற்றி கூட்டிற்கு செல்ல
வழியின்றி பரிதவிக்கும் பள்ளிச்சிறார்கள்;

யாரும் எங்கும் செல்ல வழியில்லாமல்
தற்காலிக சிறைவைக்கப் படுகின்றார்கள்,
பாதி வீட்டிலும் மீதி ரோட்டிலும்;

கடற்கரை காலி ஆகிறது;
பானிப்பூரிக் கடைகள் காணமல் போகின்றன;
வரவேண்டிய பேருந்து வருவதில்லை;

சுண்டல்காரர், டீ விற்பவர்
பூக்காரம்மா, கையேந்தி பவன் எனப் பல சாமானியர்களின்
பிழைப்பு அன்று அதோகதி ஆகிறது;

மழை ஏனோ மாநகரங்களில் ஆராதிக்கப் படுவதில்லை
மாறாக மக்கள் வாழ்க்கை அலைக்கழிக்கப் படுகிறது
மழை நகரத்தில் வரமா? சாபமா?"

இன்னும் நிறைய கவிதை கவிதை

‎"நல்லதை விரும்பினத்தான் கெட்டதா நடக்குது...........
கஷ்டத்த காதலிச்சா நல்லது பொறாமப் பட்டு என்கிட்டே ஓடி வருமா???"



‎"தோற்றுக் கொண்டே இருந்தாலும் நான் என்
இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டேதான் இருக்கிறேன்"



"இல்லாத முகவரியைக் காட்டி வழி கேட்டேன்; முறைத்தாய்.
அப்போ இதுதான் சரியான முகவரி;
வர்றியா உங்க அத்தைய பாக்க என் வீட்டுக்கு"



எத்தனைப் பேனாக்களில் எழுதினாலும் 
உன் பெயர் மட்டும் கவிதையாகி விடுகிறது....
#என்னலாம் பொய் சொல்ல வேண்டி இருக்கு


‎"ஊடல் இருக்கத்தான் வேண்டும்

உனக்கும் எனக்கும்..........ஆனால்

என் உரிமையே பறிக்கப் பட்டால் எங்கே போவேன்?"

#ஆண்கள் உரிமைநலச்சங்கம்





‎"கவிதை பழகினேன்;

கவிதைகள் படித்தேன்;

கவிஞன் ஆனேன், ஆனால் உனக்குத் தெரியாது என்

க"விதை"களுக்கு "விதை"கள் தூவியது நீதானென்று"





‎"கவிதை பிடிக்கிறது இப்போதெல்லாம்

உனக்கு கவிதைகள் படிக்கப் பிடிக்கும்

என நான் அறிந்ததிலிருந்து"





‎"கொலை கூட குத்தமில்லை;

தனிமை மட்டும் வேண்டாம்;

கொன்று விடுப் போ பெண்ணே.





‎"நண்பர்கள் வட்டத்தில் என்ன சாதியென்று அறியவிளைந்ததில்லை. 
கல்யாண பத்திரிக்கையில் மட்டும் யாரும் கேக்காமல் அறிவிக்கப் படுகிறது"


இன்னும் குழந்தை தொழிலாளிகளைப் பார்கிறேன்
சமச்சீர் கல்வி - அர்த்தம் புரிய வில்லை எனக்கு



நிசப்தம் சப்தத்தை விட சத்தமாக கேக்கிறது..........

சாலை விபத்தில் யாரும் உதவிடாமல்

ஊசலாடி ஒரு உயிர் பிரிந்த போது.





யாரும் உதவிடாத அவளின் நிர்வாணத்திற்கு,

இரவு இருள் என்னும் ஆடையைத் தந்தது.



அருகிலிருந்தும்
பேசா உன் மௌனம் என்னை
இந்த பிரபஞ்சத்தையும் விட்டு
தூர எறிந்தது போல் இருக்கிறது,,



பைத்தியம் போல் அலைந்திருக்கிறேன்
அது காற்றை விட அதிகமாக
விரவியிருப்பதை அறியாமல்.....



உன் பிரிவு காய்ச்சல் அளிக்கிறது
சந்திப்போ இன்னும் என்னை உறைய வைக்கிறது
எப்போது உயிர்விப்பாய் என்னை.



வானம் பார்த்த பூமி என் மடிக்கணினி........
மழைத்துளி உன் குறுந்தகவல்
பாமரனைப் போல் காத்திருக்கிறேன் நான்
வெறுமையே மிச்சம்?!?



‎"மரங்கள் வெட்ட பலபல காரணங்கள்,
இங்கோ வெட்டபட்டன இரு புளியமரங்கள்....
அவை புளியமரங்கள் என்ற ஒரே காரணத்துக்காக
வேலிக்குள் முளைத்தன என்ற தவறுக்காக"






என்னைப் பிரியும் முன்."