Thursday, February 9, 2012

Difference between manufacturing and production.





Manufacturing: உற்பத்தி
Production: தயாரிப்பு

     உற்பத்தி (Manufacturing) மற்றும் தயாரிப்பு (Production) இரண்டும் கிட்டத்தட்ட ஒரே அர்த்தத்தைக் குறித்தாலும், தொழிற்நுட்ப கண்ணோட்டத்தில் வேறுபாடுகள் உண்டு.

     உற்பத்தி(Manufacturing) : உற்பத்தி எனப்படுவது மூலப் பொருள்களை(raw materials) முழுமையாக நிறைவு செய்யப் பட்ட உற்பத்திப் பொருளாக மாற்றும் செயல்முறை ஆகும். அவ்வாறு ஒரு உற்பத்திப் பொருள் இறுதி வடிவம் அடைய பல்வேறு இடைநிலை செயல்முறைகளைச்(various processes) செய்ய வேண்டியிருக்கும்.

உதாரணமாக ஒரு கார் உற்பத்தியானது பல படி நிலைகளைக் கொண்டது. சுருக்கமாக ஒரு காரை தயாரிக்க சில இடைநிலை செயல்முறைகள் அவசியமாகிறது.
அவை கீழ்க்கண்டவாறு:
1) இன்ஜின் பொருத்துதல்
2)  உதிரி பாகங்களை இணைத்தல்
3)  காரின் கட்டமைப்புகளைப் பொருத்துதல்
4)  சக்கரங்களைப் பொருத்துதல்
5)  ஒழுங்கமை சரிபார்த்தால்(alignments)
6)  கதவுகள் பொருத்துதல்
7)  வண்ணப் பூச்சு அடித்தல்
மற்றும் பல....
இத்தனை படிநிலைகளும் நிறைவு பெற்றால் மட்டுமே ஒரு காரின் உற்பத்தி நிறைவு பெறுகிறது.  
    

ஒரு நிறைவான பொருளை உற்பத்தி செய்ய தேவையான
பொருட்களைப் பெற அந்த நிறுவனம் விநியோகர் ஒருவரை அல்லது பலரை (Vendors and Suppliers) சார்ந்திருக்கலாம்.

     தயாரிப்பு(Production): தயாரிப்பு எனப்படுவது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள உள்ளீடுகளை(input) அடுத்த செயல்முறைக்கு ஏற்ற பொருளாக வெளியீடு(output) செய்வது ஆகும்.
உதாரணம்: ஒரு கார் தயாரிப்பு நிறுவனம் ஒரு நாளில் ஒரு உதவியாளர் 100 டயர்களுக்கு காற்று அடித்திருக்க வேண்டும் என இலக்கு(target) கொடுக்கிறது. அவர் ஒரு நாளில் 100 டயர்களில் 85 டயர்களுக்கு காற்று நிரப்புகிறார். அது அன்றைய அந்த குறிப்பிட்ட படிநிலையின் வெளியீடு(Production output) ஆகிறது.

ஒரு முழுமயான உற்பத்தி வெளியீடை(Complete product output) ஒரு தயாரிப்பு எனலாம். ஆனால் ஒவ்வொரு இடைநிலை செயல்முறை வெளியீடுகளை(In ternal process's output) முழுமையான உற்பத்தி எனக் கொள்ளலாகாது.



12 comments:

  1. டேய்! ஓன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே கெடயாதா?

    ஏன்டா ஏன்?

    ReplyDelete
    Replies
    1. பொழுது போகாமத்தான். . . :)

      Delete
  2. சிறப்பான விளக்கம்..சில சந்தேகங்கள் இதோடு தீர்ந்தன.என் நன்றிகள்.
    ..

    ReplyDelete
  3. நல்லதோர் தகவல் .....அழகான பதிவு....

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா. மேலும் நல்ல தலைப்புக்களில் தொகுத்து அளிக்க ஆவலுடன்...........

      Delete
  4. உண்மையிலேயே பயனுள்ள தகவல்கள்..
    பகிர்ந்ததற்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. நன்றிக்கு நன்றி. . . :)

      Delete
  5. Replies
    1. நன்றி ஜோசப். :) இப்படிக்கு ஜெகன்

      Delete
  6. உங்களுக்கு வெர்சாட்டைல் பிளாக்கர் அவார்ட் கொடுத்து பரிந்துரை செய்கிறேன்.. தாங்கள் பெற்றுக்கொண்டு, பின்வரும் என்னுடைய தளத்தில் http://www.rishvan.com/2012/02/blog-post_25.html உள்ள வழிமுறையை பின்பற்றவும். வாழ்த்துக்கள்....ரிஷ்வன்.

    ReplyDelete