Saturday, October 1, 2011

மழை




"மழை பெய்கிறது
பேருந்துகள் திடீர் வெள்ளத்தில்
நீந்திச் செல்கின்றன;

மூச்சு விடாமல் மோட்டார் வாகனங்கள்
முறுக்கி விடப்படுகின்றன,
தண்ணீர் குடித்து விடக்கூடாதென;

நீந்தத் தெரியாமல் தண்ணீர் குடித்து
பாதி வழியில் பரிதாபமாய்
நிற்கும் ஆட்டோக்கள்;

நனைந்தது பாதி, நனையாதது பாதியென
அங்கும் இங்கும் சாலையோரங்களில்
தஞ்சம் புகும் மக்கள்;

புத்தகப் பொதிகள் நனைந்து விடக் கூடாதென
நெகிழிகளால் சுற்றி கூட்டிற்கு செல்ல
வழியின்றி பரிதவிக்கும் பள்ளிச்சிறார்கள்;

யாரும் எங்கும் செல்ல வழியில்லாமல்
தற்காலிக சிறைவைக்கப் படுகின்றார்கள்,
பாதி வீட்டிலும் மீதி ரோட்டிலும்;

கடற்கரை காலி ஆகிறது;
பானிப்பூரிக் கடைகள் காணமல் போகின்றன;
வரவேண்டிய பேருந்து வருவதில்லை;

சுண்டல்காரர், டீ விற்பவர்
பூக்காரம்மா, கையேந்தி பவன் எனப் பல சாமானியர்களின்
பிழைப்பு அன்று அதோகதி ஆகிறது;

மழை ஏனோ மாநகரங்களில் ஆராதிக்கப் படுவதில்லை
மாறாக மக்கள் வாழ்க்கை அலைக்கழிக்கப் படுகிறது
மழை நகரத்தில் வரமா? சாபமா?"

No comments:

Post a Comment