Saturday, October 1, 2011

ஞாபகங்கள்

‎" ஊர்க்காடு மேஞ்சு ஆடித்திரிஞ்சு
வீடு வந்து சேருவேன் பொத்தான் போடத் தெரியாத வயசுல.
கல்யாண வீட்டுல சந்தனமும் பன்னீரும் கொழச்சு புசினாப்புல
புழுதியும் தூசியும் அப்பியிருக்கும் என் மேனி பூரா;

ஆத்தா என்னைத்தேடி அலக்கழிஞ்சு போயி
என்ன விளாச இருக்கங்குச்சி எடுத்து வச்சுருப்பா;
பொழுது சாஞ்சா வீடு விட்டு அடைய வேறு கூடு உண்டா?
ஆத்தா அடிக்க வர, அம்மாயி புறத்தாலதான் ஒளிஞ்சுப்பேன்;
சாக்கு போக்கு சொல்லி ஆத்தாள அனுப்பி விட்டு
விழுந்த ஒன்னிரண்டு அடிக்கும் சமரசம் செய்வா அவ;

மூஞ்சி முகர தேச்சுக் கழுவி முகம் தொடச்சு,
உடுப்பு மாத்தி பகுடர் பூசி பக்குவம் செய்வா;
பருப்புக்கீரைப் போட்டு கத்திரிக்கா பொறிச்சு ஊட்டிவிடுவா;
அந்த சூனியக்காரிய விட்டா வேற யாரு குடுத்தாலும்
இறங்காது சோறு எனக்கு....

எதோ ஒரு மயக்கம், எங்கிருந்தோ வரும் அந்த கிறக்கம்,
என் ஆத்தாளப் பெத்தவ மடியில நான் கெடக்கயில;
தலையக் கோதி தாலாட்டு பாடுவா
கத நூறு சொல்லி கண்ணுறங்கவைப்பா;
என்ன மாயம் செய்வாளோ , என்ன மந்திரம் சொல்வாளோ,
எங்கிருந்தோ திறேகத்துல புகிந்திடும் உறக்கம்;

பாதகத்தி என்ன பரிதவிக்க விட்டு போனா பாதியில
திக்குதெச தெரியல, எனக்கு ஊழியம் பக்க யாரும்மில்ல;

பட்டணம் சேந்து பல வருசமாச்சு;
சொகுசா கார வீடு கட்டி காரு வாங்கியாச்சு;
பவுசா பஞ்சு மெத்த வங்கி ஏசி போட்டாச்சு;

வரமாட்டேங்குதே இந்த வசதியிலும்
அவ மடியில வந்த அந்த உறக்கம்;
என்ன செய்ய பாழப்போன இந்த பட்டணத்துல
போக்கத்து போயி தூக்கம் தொலைச்சேன் நான்...."

........ராஜா சங்கர் ஜீவா 

No comments:

Post a Comment